ஞானியும் அலெக்சாண்டரும்! – நாளும் பல நற்செய்திகள்
Contact Us To Add Your Business
கைகள் நிறைய எடுத்துக்கொள்!
போதும் அத்துடன் நிறுத்திக்கொள்!
வெட்ட வெளியில் படுத்திருந்தார் அந்த ஞானி.
அங்கே குதிரையில் வந்து இறங்கினான் அலெக்சாண்டர்.
அவரது புகழைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் காண நேரில் வந்திருந்தான் அவன்.
யார்? என்ற பாவனையுடன், அவனைப் பார்த்தார் ஞானி.
நான்தான், உலகம் முழுவதையும் வென்ற ‘அலெக்சாண்டர்’ என்றான்.
ஞானி சிரித்தார்.
'உலகை வென்றவன் எவனும் இல்லை' என்றார்.
இந்த இந்தியாவை நான் வெற்றிக் கொண்டுள்ளேன்.
மீண்டும் சிரித்தார் ஞானி. தமது மான் தோலை அவனிடம் கொடுத்து, இதைப்போட்டு அதில் ‘உட்காரு’ என்றார்.
மான் தோலை விரித்து, அதில் அலெக்சாண்டர் அமர்ந்தான்.
‘எழுந்திரு’ என்றார். அவன் எழுந்ததுமே மான் தோல் விரிப்பு, பழையபடி சுருண்டு கொண்டது.
பார்த்தாயா! என்றார் ஞானி. நீ விரித்து அமர்ந்து கொண்டாய், ஆனால் எழுந்தவுடன் அது சுருண்டு கொண்டது.
நீ படையுடன் வந்தாய், நாடுகள் உனக்குப் பணிந்தன. நீ போனதும், பழையபடி அவை நிமிர்ந்து விடும்!
அலெக்சாண்டர் புதிராகப் பார்த்தான் அவரை.
ஞானி அன்புடன் கூறினார்.
அலெக்சாண்டர்! ‘நதி’ பெருவெள்ளமாகப் பெருகி ஓடும்.
ஆனால், அதில் உனக்குத்தேவை ஒரே ஒரு ‘மடக்கு’ தண்ணீர்தான்.
‘கைநிறைய அள்ளி குடி’ அதில் தவறில்லை. ஆனால், ஒட்டுமொத்த நதியும் ‘உனது’ என்று சொந்தம் கொண்டாடாதே!
பாத்திரம் நிறைய நீரை ஊற்றலாம். நிரம்பிய பின்னும், அதில் நீரை ஊற்றினால், அந்த நீர் வீணில் கீழேதான் வழிந்து ஓடும்!
களஞ்சியம் பூராவும் நெல் இருந்தாலும், நீ உண்ணப்போவது ஒரு பிடிதான்!
அரண்மனை முழுதும் ஆடைகள் இருப்பினும், நீ அணியப்போவது ஒரு ஆடையைத்தான்!
உலகம் முழுவதும் நிலம் இருப்பினும், கடைசியில் நீ உறங்கப்போவது ஆறடியில்தான்!
உன் பொக்கிசம் முழுவதும் ‘தங்கம்’ நிரம்பி இருப்பினும், அது உன்னைக் காக்கவில்லை; நீதான் அதைக் காக்கிறாய்!
அவ்வளவு தூரம் அவர் எடுத்துக்கூறியும், அவனால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை.
குழப்பத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates