ஸ்டீவ் ஜாப்ஸ் – நாளும் பல நற்செய்திகள் | செந்தமிழன் சீமான் | 02-09-2023
Contact Us To Add Your Business
எல்லோரையும் போல சராசரியாக வாழ்வதில் திருப்தி அடையாதீர்கள். எந்த துறையில் இருந்தாலும் அதை அளவு கடந்து நேசியுங்கள்.
மற்றவர்கள் போல் உழைக்காமல் உங்களுக்கென்று தனித்தன்மையை உண்டாக்குங்கள்.
உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்றால், சரியான மனிதர்களிடம் தயக்கம் இல்லாமல் கேளுங்கள்.
பணத்துக்காக எதையும் செய்யாதீர்கள். எந்தச் செயலையும் நேசித்துச் செய்தால், அதன் விளைவாக அளவற்ற பணம் கிடைக்கும்.
நீங்கள் செய்யும் வேலையை நினைத்து பெருமிதப்படுங்கள்.
நீங்கள் ஒரு பொருளை உருவாக்குகிறீர்கள் என்றால், அது உயர்தரமானதாக இருக்கட்டும். வேலை செய்கிறீர்கள் என்றால் அதன் விளைவு மிகச்சிறப்பானதாக இருக்கட்டும்.
வாடிக்கையாளர்கள் மற்றும் உங்களிடம் வேலை பார்ப்பவர்களை மதித்துப் போற்றுங்கள்.
நீங்கள் உருவாக்கும் எதுவும் மதிப்புள்ளதாக இருக்கும் எனில் அதன் மதிப்பே உங்களை உயர்த்தும்.
– ஸ்டீவ் ஜாப்ஸ்